Home செய்திகள் மக்கள் சேவையே எனக்கு தேவை என செயல்படும் நிலக்கோட்டை வட்டாட்சியர் . மகிழ்ச்சியில் பயனாளிகள்..

மக்கள் சேவையே எனக்கு தேவை என செயல்படும் நிலக்கோட்டை வட்டாட்சியர் . மகிழ்ச்சியில் பயனாளிகள்..

by mohan

நிலக்கோட்டை தாலுகா என்பது எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ஒரு தாலுகா ஆகும்..பலதரப்பட்ட மக்கள் மற்றும் பல்வேறு கிராமங்கள் உள்ளடக்கிய தனித்தொகுதி ஆகும்..நிலக்கோட்டையில் வட்டாட்சியராக தனுஷ்கோடி பொறுப்பேற்றதிலிருந்து மக்கள் நலன் சார்ந்து பல்வேறு விஷயங்களை மேற்கொண்டு வருகிறார்.முக்கியமாக,கரியாம்பட்டி மற்றும் நடுப்பட்டி இடையே இரு பிரிவுகளுக்கிடையே இருந்த நீண்ட கால பிரச்சினைகளை இரு தரப்பையும் அழைத்து பேசி சரி செய்தது, ஊத்துப்பட்டியில் சில பிரச்சினைகளால் நீண்ட காலமாக சாமி கும்பிடாமல் இருந்தனர் அவர்களையும் அழைத்து பேசி சாமி கும்பிட வைத்தது,மாலையன் கவுண்டன்பட்டியில் இருதரப்புக்கும் இருந்த பிரச்சினையை பேசி தீர்த்து நல்ல முறையில் சாமி கும்பிட வைத்தது போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.மேலும், நிலக்கோட்டை காவல்துறையினரும் வட்டாட்சியருக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கி ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஒரு சிலர் தனிப்பட்ட காரணங்களுக்காக வட்டாட்சியர் மீது குறைகளை சொன்னாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது கடமைகளை செவ்வனே செய்து வருகிறார்.

வட்டாட்சியர் தனுஷ்கோடி சம்பந்தமாக சமூக செயற்பாட்டாளரும், உழைக்கும் விவசாயிகள் இயக்கத்தின் மாநில பொருளாளர் ஜீவா கூறுகையில், நான் சில வருடங்களுக்கு முன்பு தொண்டு நிறுவனம் நடத்தி வந்தேன்,அவர் வட்டாட்சியராக இல்லாத போதே மக்கள் சேவையில் பல்வேறு உதவிகளை செய்து தந்தவர்.பொதுமக்கள் நலன் சார்ந்த பொதுப்பிரச்சனைகள் இந்த தாலுகாவில் நிறையவே உண்டு, முக்கியமாக இருதரப்பு கோவில் பிரச்சினைகள், தண்ணீர் பிரச்சனை,8 ம் கால்வாய் பிரச்சினைகள் சாலை வசதிகள் போன்ற ஏராளமான பிரச்சனைகளுக்கு பொதுமக்களையும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளையும் உடனுக்குடன் அழைத்து, மிகவும் லாவகமாக பேசி முடிப்பார்,அதேபோன்று பள்ளி, கல்லூரி, விவசாய சான்றிதழ்கள் எதுவுமே எப்போதுமே நிலுவையில் வைக்காமல் உடனுக்குடன் விஏஓ, ஆர்ஐ, மூலமாக தீர்வுகளை எடுத்து வருகிறார்.ஊனமுற்றவர்களின் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து தந்தவர்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தாலுக்காகளில் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் குறைவான மனுக்கள் மட்டுமே நிலக்கோட்டையில் இருந்து செல்கிறது.அப்படி செல்லும் மனு மீது உடனடியாக தீர்வு காண்கிறார்.ஜாதி மதம் இனம் பேதம் ஏதும் பார்க்காமல் அனைவரிடமும் இன்முகத்துடன் பழகும் நல்ல அதிகாரி அவர் என கூறினார்.

மேலும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிலக்கோட்டை ஒன்றியச் செயலாளர் இத்ரீஸ் அலி கூறும்போது,நிலக்கோட்டை தாலுகாவில் பல்வேறு கிராமங்கள் கொண்ட அனைத்து மதத்தினரும் உள்ளடக்கிய ஒரு தாலுகா ஆகும், பள்ளி, கல்லூரி, பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய நிலங்கள் என நிரம்பிய தாலுகா இது.இந்த தாலுகாவில் வட்டாட்சியராக இருக்கும் தனுஷ்கோடி அவர்கள் எல்லோரையும் அரவணைத்து அனுசரித்து செல்பவர்,கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து கட்சியினரையும் அரவணைத்து வேலைகள் முடித்து தருகிறார்.முக்கியமாக தாலுகா அலுவலகம் எப்போது போல் இல்லாமல் முறையாக செயல்படுகிறது.பொதுமக்கள் நலன் சார்ந்த எந்த ஒரு ஆவணமும் நிலுவையில் இருப்பது இல்லை.பொதுமக்கள் நலன் பெறும் வகையில் எந்த கட்சியினர் எந்த கோரிக்கையை எடுத்துச் சென்றாலும் உடனுக்குடன் தீர்வுகளை காண்கிறார்,பொதுமக்கள் எந்த நேரத்திலும் இலகுவாக தாசில்தாரை சந்தித்து தமது கோரிக்கைகளை பேச முடியும் என கூறினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com