Home செய்திகள் “THAI ZET” மின்னொளி வாலிபால் போட்டி பரிசளிப்பு விழா..

“THAI ZET” மின்னொளி வாலிபால் போட்டி பரிசளிப்பு விழா..

by ஆசிரியர்

கீழக்கரை THAI ZET விளையாட்டு குழு நடத்திய மாவட்ட அளவிலான மின்னொளி வாலிபால் போட்டியின் இறுதி சுற்றுகள் மற்றும் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்குதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வெள்ள துரை ADSP கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சிறப்புரையை ஹமீது யூசுஃப் சாகிபு கீழக்கரை நகர் செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழங்கினார்.

இப்போட்டியில் முதல் பரிசுக்கான சாம்பியன் கோப்பையை மூர் டிராவல்ஸ் (MVC) அணியனரும், இரண்டாம் இடத்தை “THAI ZET” அணியினரும் வென்றனர்.மூன்றாம் பரிசை திசையன் விளையும், நான்காவது பரிசை ஏர்வாடி அணியினைரும் தட்டிச்சென்றனர்…

மேலும் இவ்விழாவில் கலந்துகொண்ட அற்புத குமார், விடுதலை சிறுத்தை கட்சி, இராமநாதபுரம் தொகுதி செயலாளர், ஹிதாயத்துல்லா நகர் செயலாளர் இசுலாமிய ஜனநாயக பேரவை, கீழக்கரை நைனா முகம்மது, நகர் துணை செயலாளர், இசுலாமிய ஜனநாயக பேரவை மற்றும் குதுபு ஜமான் முன்னாள் SDPI நகர் செயலாளர் ஆகியோருக்கு விழா குழுவின் தலைவர் MMK முகைதீன் இபுராஹிம் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்கள்.

இவ்விழாவில் கிருஷ்ணமூர்த்தி, கெஜி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். இவ்விழா சிறக்க பெரிதும் உழைத்த விழா குழுவினர்கள் மற்றும் கலந்துகொண்ட அணிகளுக்கு விழா ஏற்பாட்டாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com