Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தை அமாவசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

தை அமாவசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

by ஆசிரியர்

இராமயணம் இதிகாசத்துடன் தொடர்புடைய சேதுக்கரை கடலில் நீராடினால் பாவங்கள்,தோஷங்கள் நீங்குவதாக நம்பிக்கை உள்ளது.மேலும் தை அமாவசை முன்னிட்டு இங்கு வந்து தங்களின் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், பித்துருகடன், சங்கல்பபூஜை நடைபெற்றது. சேதுக்கரை கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் அதிகாலை முதல் பிற்பகல் வரை அமாவசை முன்னிட்டு பொதுமக்கள் புனித நீராடி இங்குள்ள சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநோயருக்கு தேங்காய் உடைத்து பூஜை செய்தனர்.

மேலும் வெள்ளை பிள்ளையார்,அகத்தியர் ஆகியோரை தரிசனம் செய்து பசுக்களுக்கு அகத்தி கீரை வழங்கினர்.பின்பு ஆதிஜெகநாத பெருமாள் தரிசனம் செய்தனர்.கீழக்கரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையில் ஏராளமானோர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com