Home செய்திகள்உலக செய்திகள் நெல்லை – தென்காசி சாலையில் சுங்கச்சாவடி அமைப்பதா? வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

நெல்லை – தென்காசி சாலையில் சுங்கச்சாவடி அமைப்பதா? வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

by Abubakker Sithik

நெல்லை – தென்காசி சாலையில் சுங்கச்சாவடி அமைப்பதா? வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

திருநெல்வேலி தென்காசி நெடுஞ்சாலையில் அமைக்கப்படும் சுங்க சாவடியை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் கன்டன ஆர்ப்பாட்டம் ஆலங்குளத்தில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். சுங்கச்சாவடியை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விக்கிரமராஜா கூறுகையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். விவசாய நிலங்கள் உள்ளது. இப்பகுதியில் விளையக்கூடிய காய்கறிகள் இங்குள்ள வியாபாரிகள் வாயிலாக அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு சுங்கச்சாவடி கொண்டு வரப்பட்டால் காய்கறிகளின் விலை உயரும் என்று கூறினார். மேலும் இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து இந்த சுங்கச்சாவடியை ரத்து செய்ய வலியுறுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் டிபிவி வைகுண்டராஜா, ஆர்கே காளிதாஸ், எம்.ஆர். சுப்பிரமணியன், ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், மாவட்ட தலைவர் கணேசன், ஆலங்குளம் எம்எஸ் காமராஜ், பாவூர்சத்திரம் எஸ்கேடிபி காமராஜ், சுரண்டை காமராஜ், தூத்துக்குடி காமராஜ் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள் சங்கத்தினர், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!