Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் ரூ.3.70 கோடி மதிப்பில் மருத்துவமனை கட்டிடங்கள்; தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்..

தென்காசி மாவட்டத்தில் ரூ.3.70 கோடி மதிப்பில் மருத்துவமனை கட்டிடங்கள்; தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்..

by ஆசிரியர்

தென்காசி மாவட்டத்தில் ரூ.3.70 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டிடங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாவட்ட துரை. இரவிச்சந்திரன் தலைமையில் 13.08.2023 அன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 

தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கரும்பனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெரிய பிள்ளை வலசை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆகிய சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர நிர்ணய திட்ட விருதையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் வழங்கினார். மேலும் பயனாளிகளுக்கு தாய் சேய் நலப்பட்டிகள் டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் 10 பெட்டகங்கள், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொழுநோய் பயனாளிகளுக்கு MCR காலணிகள் மற்றும் இதர உதவி பொருட்கள், மகப்பேறு சஞ்சிவி சித்த மருந்து பெட்டகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் வழங்கினார்.

பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேசியதாவது, தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்னும் மருத்துவக் கல்லூரிக்கு ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் ஒப்புதல் வழங்கிய உடன் முதலில் தென்காசி மாவட்டத்தில் மாவட்ட மருத்துவக் கல்லுாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.60 இலட்சம் மதிப்பில் கண் அறுவை அரங்கம் மற்றும் அறுவை சிகிச்சை பின் கவனிப்பு பிரிவு மற்றும் ரூ.15 இலட்சம் மதிப்பில் ஹோமியோபதி பிரிவு கட்டிடம், ரூ.50 இலட்சம் மதிப்பில் நெட்டூர் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம். ரூ.50 இலட்சம் மதிப்பில் கரிவலம்வந்தநல்லுார் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம், ரூ.60 இலட்சம் மதிப்பில் மடத்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம், ரூ.75 இலட்சம் மதிப்பில் மேலக்கடையநல்லூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் ரூ.30 இலட்சம் மதிப்பில் மேலப்பூரிலும், ரூ.30 இலட்சம் மதிப்பில் பொட்டல்புதூரிலும், ஆக மொத்தம் ரூ.3.70 கோடி செலவில் 8 கட்டிடங்கள் திறந்து வைக்கபட்டுள்ளது. இந்தியாவில் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உறுதி செய்வதற்கு அதற்கான வழிக்காட்டுதலை வழங்குவதற்காகவும். தேசிய தர உறுதி நிர்ணய திட்டம் என்று 2013-14 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது. National Quality Assurance Standards என்கிற வகையில் NQAS என்று சொல்லப்படுகின்ற சான்றிதழ்கள் இந்திய அளவில் சிறப்பாக செயல்படுகின்ற, சிறந்த தரத்தோடு இருக்கின்ற, முழு கட்டமைப்போடு இருக்கின்ற, மருத்துவமனைகளை தேர்ந்தொடுத்து, இந்தச் சான்றிதழ்கள் வழங்கும் பணி 2013-14 இல் தொடங்கப் பட்டிருக்கிறது. இதுவரை தொடங்கப்பட்ட நாளிலிருந்து கடந்த 10 ஆண்டுகளாக இன்று வரை பெறப்பட்டிருக்கும் ஒட்டு மொத்த சான்றிதழ்களின் எண்ணிக்கை 478. கடந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலால் இந்த துறையைச் சேர்ந்த அலுவலர்கள், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அயராது பாடுபட்டதன் விளைவாக கடந்த ஓராண்டில் மட்டும் 239 தரச் சான்றிதழ்கள் NQAS என்று சொல்லபடும் தரச்சான்றிழ்கள் ஒன்றிய அரசிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக பெறப்பட்ட ஒட்டுமொத்த சான்றிதழ்களின் எண்ணிக்கை 478. கடந்த ஆண்டு மட்டுமே பெறப்பட்ட சான்றிதழ்களின் எண்ணிக்கை 239. அதாவது 50% சான்றிதழ்களை ஓராண்டில் பெற்றிருக்கிறோம். மீதமிருக்கும் 50% சான்றிதழ்கள் கடந்த 9 ஆண்டுகளில் பெறப்பட்டிருகிறது என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் செயற் பொறியாளர் (பொதுப்பணித்துறை மற்றும் கட்டிடம்) அழகிரிசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி போஸ், ஒன்றிய குழு தலைவர்கள், சேக் அப்துல்லா (தென்காசி), திவ்யாமணிகண்டன் (ஆலங்குளம்), காவேரி சீனித்துரை (கீழப்பாவூர்), லாலசங்கரபாண்டியன் (சங்கரன்கோவில்), இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பிரேமலதா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) முரளி சங்கர், சித்தா மருத்துவ அலுவலர் மரு.உஷா, ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் திலகராஜ், நெட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ்வரி, தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), ரா.ராமசுப்பிரமணியன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com