சங்கரன்கோவில் அருகே அரிவாளை காட்டி மிரட்டி தங்க செயின் பறித்த இரண்டு நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கலப்பாங்குளம் காலனி அருகே கடந்த 07.01.24 அன்று காலை 06.00 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் கணவன் மனைவி சென்று கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து அரிவாளை காட்டி மிரட்டி நகையை பறித்து சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், காவல் துறையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பேச்சிமுத்து(28) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் திருட்டிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் திருடிய 24 கிராம் தங்க செயின் மீட்கப்பட்டது. செயின் பறிப்பில் தொடர்புடைய மற்றொரு நபர் 09.01.2024 அன்று ஆலங்குளம் காவல் நிலையத்தில் வேறொரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.