Home செய்திகள்உலக செய்திகள் தென்காசி மாவட்ட காவல் துறை; செய்தித் தொகுப்பு..

தென்காசி மாவட்ட காவல் துறை; செய்தித் தொகுப்பு..

by Abubakker Sithik

தென்காசி மாவட்ட காவல் செய்திகள்..

ஆட்டோவிற்கு வழி விடக் கூறியதால் கல்லால் தாக்கிய நபர் கைது..

சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதி நகரைச் சேர்ந்த சங்கரன் என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவிற்கு வழி விடாமல் அதே பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் பிரச்சனை செய்துள்ளார். ஏன் இப்படி பிரச்சனை செய்கிறாய் என்று சங்கரன் கேட்டதற்கு அவரை அசிங்கமாக பேசி கல்லால் தாக்கியுள்ளார். அதனை தடுக்க வந்த அவரது மகனான திருமலைக் குமாருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து திருமலைக் குமார் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் மாரியப்பன் விசாரணை மேற்கொண்டு மேற்படி சங்கரன்கோவில் பாரதிநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் மாரீஸ்வரன்(33) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்.

சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த நபர்கள் கைது..

குருவிகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழங்கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த அழகு என்பவரின் மகன் காளிராஜ்(29) மீது சார்பு ஆய்வாளர் ராஜேஷ்குமார் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 06 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போன்று, தென்காசி மாவட்டத்தில் 19.03.2024 அன்று சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கைது..

கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதாபுரம் பகுதியில் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மேட்டூரை சேர்ந்த தவ பெத்தன் என்பவரின் மகன் நாராயணன்(62), டானாவூர் சுப்புராஜ் என்பவரின் மகன் டேவிட்(29), ஆசீர்வாதபுரம் முப்புடாதி என்பவரின் மகன் சக்திவேல் (38) மற்றும் பால்வண்ணநாதபுரம் வீரசக்தி என்பவரின் மகன் முத்துக்குமார் (35) ஆகியோர் மீது சார்பு ஆய்வாளர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூபாய் 400 பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது..

வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்துவழி தலையணை சாலையில் சார்பு ஆய்வாளர் அவிவினா தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் இருந்த போது சட்ட விரோதமாக விற்பனைக்காக காரில் கஞ்சா வைத்திருந்த சிந்தாமணியை சேர்ந்த தங்கப்பாண்டி என்பவரின் மகன் சுரேஷ்(23), அருளாட்சியை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் மகேந்திரன்(21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 1,000 மதிப்பிலான 100 கிராம் கஞ்சா, எடை இயந்திரம், கார் மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு காவல் துறையினர் மற்றும் RPF படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு..

தென்காசி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்களை எச்சரிக்கும் விதமாகவும், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P. சுரேஷ்குமார் நேரடி கண்காணிப்பில் 20.03.2024 அன்று ஊத்துமலை பகுதியில் ஆலங்குளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்ணாபஸ் முன்னிலையில் RPF வீரர்கள், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது. முன்னதாக, சுரண்டை பகுதியில் ஆலங்குளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்ணாபஸ் முன்னிலையில் RPF வீரர்கள், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து இந்த கொடி அணிவகுப்பு 19.03.2024 அன்று நடைபெற்றது.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 221 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 13 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர். முன்னதாக தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 251 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 06 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!