Home செய்திகள்உலக செய்திகள் 17 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த காவல் துறை; தென் மண்டல காவல் துறை தலைவர் பாராட்டு..

17 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த காவல் துறை; தென் மண்டல காவல் துறை தலைவர் பாராட்டு..

by Abubakker Sithik

17 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த நபரை கைது செய்த காவல் துறை; தென் மண்டல காவல் துறை தலைவர் பாராட்டு..

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த காவல் துறையினருக்கு தென் மண்டல காவல் துறை தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் 2006 ஆம் ஆண்டு பதிவான குற்ற வழக்கின் குற்றவாளியான கபீர்@ மணிசாகுல் @ அபு குரைரா(42) என்பவர் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு முறையாக ஆஜராகாமல் ஒவ்வொரு முறையும் தனது பெயரை மாற்றி கூறி வந்துள்ளார்.

இந்நிலையில், மேற்படி குற்றவாளியை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதின் பேரில், காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேற்படி குற்றவாளி கடந்த 2007 ஆம் ஆண்டு தென்காசியில் நடைபெற்ற (6 murder) வழக்கின் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 17 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஷாஜஹான், தலைமை காவலர்கள் இதயத்துல்லா மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோருக்கு தென்மண்டல காவல் துறை தலைவர் Dr.N. கண்ணன் IPS பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!