Home செய்திகள்உலக செய்திகள் தென்காசி மாவட்ட காவல் துறை; செய்தித் தொகுப்பு..

தென்காசி மாவட்ட காவல் துறை; செய்தித் தொகுப்பு..

by Abubakker Sithik

தென்காசி மாவட்ட காவல் செய்திகள்..

லேப்டாப் மற்றும் ஆம்ப்ளிபையர் திருடிய மூன்று நபர்கள் கைது..

ஆய்க்குடி குதியில் அமைந்துள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் காவலாளி வெளியே சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கலையரங்கதில் இருந்த லேப்டாப் மற்றும் ஆம்ப்ளிபையர் ஆகியவற்றை திருடி சென்றதாக அதன் மேலாளர் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டு மேற்படி திருட்டில் ஈடுபட்ட சிந்தாமணியை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் சுரேஷ் (35), அகரக்கட்டு பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்பவரின் மகன் அந்தோணி நிக்ஸன் ஜெயபால் (34) மற்றும் லூர்து என்பவரின் மகன் லூர்து அந்தோணி ராஜ் (30) வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட லேப்டாப் மற்றும் ஆம்ப்ளிபையர் பறிமுதல் செய்யப்பட்டது.

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது..

புளியரை காவல் நிலைய எல்கைகுட்பட்ட பழனிச்சாமையில், சார்பு ஆய்வாளர் தீபன் குமார் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த மேலக்குத்த பாஞ்சான் பகுதியைச் சேர்ந்த நைனார் என்பவரின் மகன் அர்ஜுனன் (60) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 5,280 மதிப்பிலான 92 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

காளத்தி மடத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நபர் சிறையில் அடைப்பு..

தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளத்திமடம் வேத கோவில் தெருவில் சட்ட விரோதமாக விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை வைத்திருந்த குருவன் கோட்டை பகுதியை சேர்ந்த தங்கசாமி என்பவரின் மகன் ஆதிபரமேஷ் (35) என்ற நபரை ரோந்து பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் வேல் முருகன் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6500 ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இரும்பு பைப்புகளை திருடிய நபர் கைது..

தென்காசி மாவட்டம், ஆழ்வார் குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிகுளத்தில் பெரியசாமி என்பவரின் தோட்டத்தில் மாட்டுத் தொழுவம் அமைப்பதற்கு இரும்பு பைப்புகளை தோட்டத்தில் வைத்திருந்த நிலையில் அதை அடையாளம் தெரியாத யாரோ திருடி சென்றதாக தோட்டத்தின் காவலாளியாக வேலை பார்த்து வரும் நாராயணன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் தேவி விசாரணை மேற்கொண்டு மேற்படி இரும்பு பைப்புகளை திருடிய செட்டிகுளம் ஏழாவது தெருவை சேர்ந்த லூர்துசாமி என்பவரின் மகன் அற்புதராஜ் (37) என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தார். மேலும் திருடப்பட்ட 5500 ரூபாய் மதிப்பிலான இரும்பு பைப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்த நபர் சிறையில் அடைப்பு..

தென்காசி, குத்துக்கல் வலசை பகுதியில் பெண் ஒருவர் அவருக்கு சொந்தமாக வீடு கட்டி வருவதாகவும், இந்நிலையில் வீடு கட்டுவதற்கு கொத்தனார் வேலை செய்ய வந்த கார்த்திக் குமார் என்ற நபர் தன்னை பின்பக்கத்தில் வந்து தவறாக நடக்க முயற்சி செய்ததாக காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் தேவிப்பிரியா விசாரணை மேற்கொண்டு மேற்படி பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்த சாம்பவர் வடகரையை சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் கார்த்திக் குமார் (39) என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தார்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 11 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர்.

முன்னதாக தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 354 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 17 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!