Home செய்திகள்உலக செய்திகள் ஊத்துமலை பகுதி மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்; தென்காசி மாவட்ட கலெக்டர் வழங்கினார்..

ஊத்துமலை பகுதி மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்; தென்காசி மாவட்ட கலெக்டர் வழங்கினார்..

by Abubakker Sithik

ஊத்துமலை கிராம பகுதியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 59 பயனாளிகளுக்கு ரூ. 2,44,975 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் வழங்கினார். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டத்திற்கு உட்பட்ட ஊத்துமலை கிராமத்தில் சாந்த மரகதம் மஹாலில் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் முன்னிலையில் 11.01.2024 அன்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஒவ்வொரு மாதமும் மனுநீதிநாள் முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் கடைக்கோடியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கண்டறிந்து இம்முகாம் மூலம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார். முன்னாள் அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு பொதுமக்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. இதுபோல பல எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களும் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். எனவே பொதுமக்கள் அனைவரும் அனைத்து திட்டங்களையும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.

இம்முகாமில் வருவாய்த் துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையிணையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி உதவித் தொகைக்கான ஆணையினையும், 2 பயனாளிகளுக்கு விதவை உதவித் தொகைக்கான ஆணையினையும், 2 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணையினையும், குடிமைப்பொருள் வழங்கல் துறையின் மூலம் 15 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை நகல்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு தூய்மை பணியாளர் நலவாரிய அட்டைகளையும், தாட்கோ மூலம் 9 பயனாளிகளுக்கு நலவாரிய அட்டைகளையும், வேளாண்மைத் துறையின் மூலம் வேளாண்மை இயந்திரமாக்கும் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.68,000 மதிப்பிலான சுழற் கலப்பைகளையும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.10,375 மதிப்பிலான மின்விசை தெளிப்பானையும், நெல்லுக்குப்பின் உழுந்து திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.2,000 மதிப்பிலான 20 கிலோ உழுந்தினையும், தோட்டக் கலைத்துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 1 பயனாளிக்கு தக்காளி நாற்றுகளும், 1 பயனாளிக்கு பூச்சி ஊட்டச்சத்து மேலாண்மையும், 1 பயனாளிக்கு கொய்யா பரக்கும் விரிவாக்கும் என மொத்தம் 3 பயனாளிகளுக்கு ரூ. 13,600 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்தறை மூலம் 3 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சஞ்வீவி பெட்டகத்தினையும் என மொத்தம் ரூ. 2,44,975 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் வழங்கினார்.

முன்னதாக மனுநீதி நாள் முகாமில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சியினையும், தோட்டக்கலை துறை வேளாண்மை துறை, மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் அரசு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினையும் மாவட்ட ஆட்சித் தலைவர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திவ்யாமணிகண்டன், வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் அழகப்பராஜா, தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்பு திட்டம்) தெய்வ குருவம்மாள், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பத்மாவதி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் முருகானந்தம், ஒன்றிய கவுன்சிலர்கள் முரளிராஜ், மலர்க்கொடி, ஊத்துமலை ஊராட்சிமன்றத் தலைவர் (பொ) பிச்சம்மாள், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!