Home செய்திகள்உலக செய்திகள் தென்காசி மாவட்டத்தில் தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு முதல் நிலை சுழற்சி (Ist Randomization)

தென்காசி மாவட்டத்தில் தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு முதல் நிலை சுழற்சி (Ist Randomization)

by Abubakker Sithik

தென்காசி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு முதல்நிலை சுழற்சி (Ist Randomization)

தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட 219 சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி, 220 வாசுதேவநல்லூர் சட்டமன்றத்தொகுதி, 221 கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி, 222 தென்காசி சட்டமன்றத் தொகுதி, 223 ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு முதல்நிலை சுழற்சி (Ist Randomization) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட 219 சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி, 220 வாசுதேவநல்லூர் சட்டமன்றத்தொகுதி, 221 கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி, 222 தென்காசி சட்டமன்றத் தொகுதி, 223 ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு முதல்நிலை சுழற்சி (Ist Randomization) 22.03.2024 அன்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோரால் நடத்தப்பட்டது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமிர்தலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் கே.செல்வி), வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான கண்காணிப்பு அலுவலர் செல்வி.மதிவதனா, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக தனி வட்டாட்சியர் (தேர்தல்) ஹென்றி பீட்டர், தென்காசி மாவட்டத்திற்கான 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல்நிலை சுழற்சி நடத்தி முடிக்கப்பட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணிணி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான அறிக்கை சட்டமன்றத் தொகுதி வாரியாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் முதல்நிலை சோதனை முடிவுற்ற (Ist level checking) வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தென்காசி நகர வேளாண்மை ஒழுங்கு முறை கிட்டங்கியானது அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரால் திறக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்கள் ஆகியவை சட்டமன்றத் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!