Home செய்திகள்உலக செய்திகள் தென்காசி மாவட்டத்தில் வரும் மார்ச் 25 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு..

தென்காசி மாவட்டத்தில் வரும் மார்ச் 25 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு..

by Abubakker Sithik

தென்காசி மாவட்டத்தில் வரும் மார்ச் 25 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு..

தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு வருகின்ற 20 ஆம் தேதி பொதுத் தேர்வு மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருநாள் (பங்குனி 12) 25.03.2024 திங்கள்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பார்வை 1ல் கண்டுள்ள அரசாணையின் படி வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பிற்குட்பட்டு 25.03.2024 திங்கள் கிழமை அன்று பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இவ்விடுமுறை பொருந்தாது எனவும், மேற்படி 25.03.2024 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மக்களவை தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், பணியாளர்களுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. மேலும் அன்று வழக்கம் போல் வேட்பு மனுத் தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument Act -1881) ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது, இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்டுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள விடுமுறையை ஈடு செய்யும் வகையில் (06.04.2024) சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அச்சமயம் கோடை விடுமுறையில் உள்ள கல்வி நிறுவன மாணவ மாணவியருக்கு இவ்வேலை நாள் பொருந்தாது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!