Home செய்திகள்உலக செய்திகள் தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்; உபகரணங்கள் வழங்கல்..

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்; உபகரணங்கள் வழங்கல்..

by Abubakker Sithik

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்; உபகரணங்கள் வழங்கல்..

தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடந்தது. தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (15.03.2024) நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் 2023 – 2024 ஆம் ஆண்டில் சாகுபடி செய்யப்பட்ட நெல் – 38604 ஹெக்டேர், சிறுதானியங்கள்- 21173 ஹெக்டேர், பயறு வகைகள் 28425 ஹெக்டேர், பருத்தி 2847, கரும்பு 1416 ஹெக்டேர், எண்ணெய் வித்து 1448 ஹெக்டேர், மலைப் பயிர்கள்- 14182 ஹெக்டேர், பழங்கள் 10195 ஹெக்டேர், காய்கறிகள் 2145 ஹெக்டேர், வாசனைப் பயிர்கள் 875 ஹெக்டேர், மருத்துவப் பயிர்கள் – 143 ஹெக்டேர், பூக்கள் 573 ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது. மழையளவு, நீர் இருப்பு விபரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு விபரம் அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கீழப்பாவூர் வட்டார வேளாண்மைத் துறையினர், தென்காசி மற்றும் கீழப்பாவூர் வட்டார தோட்டக்கலைத் துறையினர் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்து பார்வையிட திரளான விவசாயிகளும் கண்டு பயனடைந்தனர்.

வேளாண்மைத்துறை மூலம் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இரண்டு பயனாளிகளுக்கு மண் புழு படுக்கை ரூ.6000 மானியத்தில் வழங்கப்பட்டது. தோட்டக்கலைத் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு சூரிய ஒளி பூச்சிக் கவர்ச்சி பொறி ரூ.1500 மதிப்பில் வழங்கப்பட்டது. கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் காய்கறி அவரை விதை ரூ.7500 மானியத்தில் ஒரு பயனாளிக்கு வழங்கப்பட்டது. தென்காசி மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திர மயமாக்கல் துணைத் திட்டத்தின் கீழ், இரண்டு பயனாளிகளுக்கு ரூ.8,50,000 மானியத்தில் டிராக்டர் இயந்திரம் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட வன அலுவலர் முனைவர் இரா. முருகன், வேளாண்மை இணை இயக்குநர் கோ. பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ச. கனகம்மாள், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சு.ஜெயபாரதி மாலதி, துணை இயக்குநர், வேளாண் விற்பனை மற்றும் வணிகம் சுப்பையா, வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய மற்றும் மாநிலத் திட்டம்) (பொ) மு. உதயக்குமார், உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) சங்கர், முதுநிலை மண்டல மேலாளர், தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இரா.ராஜேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கு. நரசிம்மன் மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், அனைத்து துறை அலுவலர்கள், அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 167 மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் விரிவான மற்றும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலை வழங்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலரால் அறிவுறுத்தப்பட்டது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!