Home செய்திகள்உலக செய்திகள் நூலக துறையில் சாதனை புரிந்த தென்காசி நூலகர் பிரமநாயகம் நூலகப் பணி நிறைவு; பொது மக்கள் வாழ்த்து..

நூலக துறையில் சாதனை புரிந்த தென்காசி நூலகர் பிரமநாயகம் நூலகப் பணி நிறைவு; பொது மக்கள் வாழ்த்து..

by Abubakker Sithik

நூலக துறையில் சாதனை புரிந்த தென்காசி நூலகர் பிரமநாயகம் நூலகப் பணி நிறைவு; பொது மக்கள் வாழ்த்து..

நூலக துறையில் அளப்பரிய சாதனை புரிந்த தென்காசி நூலகர் பிரமநாயகம் பணி நிறைவு பெற்றார். அவரது பணி நிறைவு விழாவில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். தென்காசி மாவட்டத்தில் நூலகர் பிரமநாயகம், நூலகத்துறை அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் என மேற்கொண்ட முன்னெடுப்புகள் பணிகள் மிகவும் சிறப்பானவை. தென்காசி நூலகர் பிரமநாயகம் தமிழ்நாடு அரசின் நோக்கங்களை முழுமையாக செயல்படுத்தி தென்காசி பகுதி பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுதல்களை பெற்றுள்ளார்.

பொது நூலகத் துறையில் 1991 முதல் 33 ஆண்டுகாலம் நூலகராக படுக்கப்பத்து, சாத்தான் குளம், சிவகாசி, சங்கரன் கோவில், ரெட்டியார்பட்டி, திருநெல்வேலி, ஆரப்பாளையம், தென்காசி என பல நூலகங்களில் நூலகப் பணி செய்துள்ளார். தனது நூலக பணியில் 1994 ஆம் ஆண்டு மாநில நூலகர் விருதும், 2002 ஆம் ஆண்டு தற்போதைய நல் நூலகர் விருதும் பெற்றுள்ளார். நூலகத்திற்கு புரவலர் உறுப்பினர் நன்கொடை, கட்டிடங்கள், தளவாடங்கள், கணிப் பொறிகள் என ரூபாய் 25 கோடி மதிப்பிற்கு வளர்ச்சி பணிகள் செய்துள்ளார். நூலகம் குறித்த கட்டுரைகள், கருத்தரங்குகள், பள்ளி மாணவர்களுக்கு நூலகம் மூலம் வாசிப்பு பயிற்சி அவர்களுக்கு நூலக வார விழாவின் போது கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட அனைத்து வித போட்டிகளும் நடத்தி பரிசுடன் புத்தகங்களும் அளித்து மாநில அளவில் அதிக பள்ளி மாணவர்களை உறுப்பினராக தென்காசி நூலகத்தில் சேர்த்த பெருமை இவரை சாரும். பொது நூலக துறையில் இரண்டு முறை நல்நூலகர் விருது பெற்று சிறப்பாக கல்விப்பணி செய்த தென்காசி நூலகர் பிரமநாயகம் பணியினை நிறைவு செய்தார்.

தற்போது தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் பதிவு செய்து 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தினமும் நூலகம் வருகை தந்து பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு கடந்த காலங்களில் இலவச பயிற்சி, இலவச மாதிரி தேர்வு, இலவச பயிற்சி கையேடுகள் நன்கொடையாளர் மூலம் வழங்கப்பட்டு, போதிய பயிற்சியும் மாதிரி தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட மைய நூலக ரூ.6 கோடி மதிப்பில் அமைவதில் இவரின் பங்கும் அதிகமாக இருந்தது. இவரது பணி நிறைவு பாராட்டு விழா தென்காசியில் பிப்.29 அன்று மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் திருமலை முத்துக் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் சங்கரன், திருநெல்வேலி மாவட்ட நூலக ஆய்வாளர் கணேசன், தென்காசி மாவட்ட முதல் நிலை நூலகர்கள் முனியப்பன், திருநெல்வேலி மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் வைலட், தென்காசி மாவட்ட நூலக ஆய்வாளர் சண்முகசுந்தரம், நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் ரவிச்சந்திரன், சங்கரன்கோவில் வட்டார நூலகர் முருகன், பாளை மைய நூலக நூலகர் முத்துலட்சுமி, உதவியாளர் ஜேசுராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கவிஞர் குழந்தை இயேசு, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மயிலேறும் பெருமாள், வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் முத்துராமலிங்கம், அலுவலர் ஒன்றிய மண்டல தலைவர் வெற்றிவேலன், மாவட்ட தலைவர் பழனிஸ்வரன், மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட பொருளாளர் நாகராஜன், திருநெல்வேலி மாவட்ட தலைவர் குமார், செயலாளர் அகிலன், முத்துக்குமார், ஆகாஷ் ஐஏஎஸ் அகாடமி இயக்குனர் மாரியப்பன், பயிற்சியாளர் அப்துல் ரகுமான், முத்து மணிகண்டன், சிவராஜ்வேல், ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் சரவணன், ஆலங்குளம் ராஜ் அகாடமி நிறுவனர் ஹரிகிருஷ்ணன், அபாக்ஸ் நிறுவனர் ராமசுப்பிரமணியம், தென்காசி மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், சிவகிரி சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் மைதீன் பட்டாணி, தென்காசி எல்ஐசி கிளை மேலாளர் செந்தில்குமார், ஆலங்குளம் எல்ஐசி மேலாளர் முத்துகிருஷ்ணன், தென்காசி மாவட்ட பத்திரிகை நிருபர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கணபதி பால சுப்பிரமணியன், ஜீவா மணிகண்டன், பாலசுப்ரமணியன், குமார், பாலமுருகன், பணி நிறைவு நூலக ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோருடன்,

எல்ஐசி அலுவலர்கள் ஸ்டாலின், அசோக் மற்றும் குமார், இ.எஸ்.ஐ மேலாளர் பணி நிறைவு ராஜகோபால், தலைமை ஆசிரியர் பணி நிறைவு ஆறுமுகம், வாசகர் வட்ட தலைவர், பால சுப்பிரமணியன், பொருளாளர் யோகாடவர் சேகர், சலீம், முகம்மது மீரான், நூலகர்கள் சுந்தர், முத்துமாணிக்கம், ராமசாமி, நாகராஜன், சண்முகவேல், ஜெய்லானி, மீனாட்சி சுந்தரம், நடராஜன், மீனாட்சி, சீனிவாசன், சக்திவேல், அண்ணாமலை சாமி, ஜூலியா ராஜ செல்வி, நிஷா, இலஞ்சி முருகன், நூலக கூட்டுறவு சிக்கன நாணய சங்க முன்னாள் தலைவர் கருப்பசாமி, அன்னாள், கலா, கிறிஸ்டிபாய், அமுதா, ராஜேஸ்வரி, வீரக்குமார், வீரபுத்திரன், சுடலை மணி, சரவணன், ராமலட்சுமி, முத்துக்குமார், கோலப்பன், பரமசிவன், அருண்குமார், ஆரல்வாய்மொழி, கந்தன் பிள்ளை, செல்லம்மாள் பார்வதி, முருகன், ராதா லட்சுமி, சூரிய ஷிவானி, ஸ்கந்தனா, தென்காசி மைய நூலகத்தில் போட்டித் தேர்விற்கு பயின்று வரும் பட்டதாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com