தென்காசி மாவட்டத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிறைவு தினத்தை முன்னிட்டு கலை நிகழ்ச்சி மற்றும் ஹெல்மெட் அணிந்து பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது.
35 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிறைவு தினத்தை முன்னிட்டு தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம், தென்காசி மாவட்ட போக்குவரத்து காவல் மற்றும் ஸ்பீடு டீம் குரூப் ஆஃப் கம்பெனிகள் இணைந்து நடத்திய கலை நிகழ்ச்சி மற்றும் ஹெல்மெட் அணிந்து பேரணி 14.02.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி சுரேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்ததாவது, 35 வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத தினம் 15.01.2024 முதல் 14.02.2024 வரை நடைபெற்றது. போக்குவரத்துக் காவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், போக்குவரத்துத் துறை ஆகியோர்களை உள்ளடக்கிய கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் தவறான திசையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டுவதை கண்காணிக்கும் பொருட்டு சிறப்பு செயலாக்கத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இலஞ்சி பாரத் வித்யா மந்திர் பள்ளி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றதை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள், காவல் துறையினர், பொதுமக்கள் பங்கு பெற்ற ஹெல்மெட் அணிந்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி. சுரேஷ் குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணி தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று வட்டார போக்கு வரத்து அலுவலகத்தை சென்றடைந்தது.
இந்நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் நாகசங்கர், காவல் ஆய்வாளர் மணி, வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி, வட்டார போக்குவரத்து அலுவக நேர்முக உதவியாளர் மகாலிங்கம், கண்காணிப்பாளர்கள் முருகன், ஜீவானந்தம், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் வைகை குமார், மாரிமுத்து, கமால், இலஞ்சி குமரன், இக்பால், செய்யது, பஷீர், ஜெய கிருஷ்ணன், பிரபாகரன், முருகன், பட்டு, பாலன், மாரி மற்றும் பயிற்சியாளர்கள், இரு சக்கர நிறுவன வாகன ஊழியர்கள், பொதுமக்கள் காவல் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.