Home செய்திகள்உலக செய்திகள் ரேபிஸ் தடுப்பூசி மையம் தெரு நாய்கள் கருத்தடை மையம் அமைத்திட ஆட்சியரிடம் கோரிக்கை..

ரேபிஸ் தடுப்பூசி மையம் தெரு நாய்கள் கருத்தடை மையம் அமைத்திட ஆட்சியரிடம் கோரிக்கை..

by Abubakker Sithik

தென்காசி மாவட்டத்தில் நாய்கள் கருத்தடை மையம் மற்றும் ரேபிஸ் தடுப்பூசி மையம் அமைத்திட வேண்டும்; மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை..

தென்காசி மாவட்டத்தில் தெரு நாய்கள் கருத்தடை மையம் மற்றும் ரேபிஸ் தடுப்பூசி மையம் அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அதில், கடையம் யூனியனுக்குட்பட்ட, சுமார் 80 பேருக்கு தகுதி இருந்தும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வராமல் உள்ளது. எனவே இதனை மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்து தகுதியுள்ள மகளிருக்கு உடனடியாக கலைஞர் உரிமைத் தொகை கிடைக்க உதவ வேண்டும். திருமலையப்பபுரம் முதல் கோவிந்த பேரி வரை உள்ள சாலை, ஒப்பந்தம் கொடுக்கப்பட்டும் பல மாதங்களாக வேலை துவங்கப்படாமல் உள்ளது. இது சம்பந்தமாக, கடையம் காவல் நிலையத்தில் நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் பிப்ரவரி மாத இறுதிக்குள் சாலைப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்து விடும் என்று ஒப்பந்ததாரர் தெரிவித்திருந்தார். ஆயினும் இதுவரை சாலை பணிகள் துவங்கப்படவில்லை. எனவே அந்த சாலையை உடனடியாக அமைத்து தர வேண்டும்.

தென்காசி மாவட்டத்தில் பரவலாக தெரு நாய் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே பெரியவர்களையும், குழந்தைகளையும் தெரு நாய்கள் திடீரென கடித்து குதறி, ஆபத்துகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கடையம் வட்டாரத்தில் அதிகமான தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. ஊராட்சி மன்றங்கள் சார்பில் நாய்கள் பிடிக்கப்பட்டாலும் மீண்டும் அவைகள் வந்து விடுகின்றன. இதனை கருத்தில் கொண்டு தென்காசி மாவட்டத்தில் தெரு நாய்கள் கருத்தடை மையம், மற்றும் ரேபிஸ் தடுப்பூசி மையம், உடனடியாக அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று மனுக்களை, மனு பெறும் நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல்காதர் வழங்கினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!