Home செய்திகள்உலக செய்திகள் தென்காசி மாவட்டத்தில் நில அளவை செய்ய இணைய வழி சேவை; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..

தென்காசி மாவட்டத்தில் நில அளவை செய்ய இணைய வழி சேவை; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..

by Abubakker Sithik

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் நில அளவை செய்ய “எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்” இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் நில அளவை செய்ய “எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் “இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழ்நாடு முதலமைச்சரால் 20-11-2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நில அளவை செய்ய எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்” நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நில அளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட “அறிக்கை வரைபடம்” ஆகியவற்றை மனுதாரர் https:// eservices.tn.gov.in, என்ற இணைய சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்யும் கொள்ளும் வகையில் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!