இராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் உத்திர விழா காப்பு கட்டு..

இராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் 79 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவையொட்டி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, திருமஞ்சன அபிஷேகத்துடன் காப்பு கட்டுடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர். இதை தொடர்ந்து வண்ண பாராயணம் பாடப் பட்டது. மார்ச் 20 வரை 9 நாட்களுக்கு தினமும் இரவு ஆன்மிக சொற்பொழிவு, கிராமிய ஒயிலாட்டம், கரகாட்டம், பரதம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 21 பங்குனி தினத்தன்று காலை நொச்சி வயல் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால் குடம், காவடி சுமந்து ஊர்வலமாக வந்து வழிவிடு முருகன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இதை தொடர்ந்து அன்ன தானம் வழங்கப்படுகிறது. மார்ச் 21 இரவு பூக்குளி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மார்ச் 22 இரவு சுவாமி முருகன் வீதியுலா நடக்கிறது. கோயில் தர்மகர்த்தா சு.கணேசன் தலைமையில் விழா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். 

குயவன்குடி சுப்பையா கோயில், மண்டபம் காந்தி நகர் சண்முக சடாச்சர வேல், ரயில்வே ஸ்டேஷன் கதிர்காம முருகன் கோயில், இடையர்வலசை முருகன் கோயிலிலும் கொடியேற்றத்துடன், விழா தொடங்கியது