Home செய்திகள் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை…

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை…

by ஆசிரியர்
கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கும் இராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் குழு ஆய்வினை உடனடியாக கைவிடக் கோரி மாவட்டச் செயலாளர் இரா.சிவபாலன் தலைமையில் பொறுப்பாளர்கள்  நேரில் மனு  அளித்தனர்.
இது குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இராமநாதபுரம் மாவட்டச்செயலாளர் இரா.சிவபாலன் கூறியதாவது,  மாவட்ட கல்வித்துறை சார்பில் குழு ஆய்வு என்ற நடைமுறை     ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளுக்கு மன உளைச்சல் ஏற்படுகின்ற வகையில்  அமைந்துள்ளதாலும், மாணவர்களுக்கான வகுப்பறையில் கற்றல் கற்பித்தலில் பின்னடைவை இது ஏற்படுத்தும் என்பதாலும் இந்த குழு ஆய்வு முறையை முற்றிலும் கை விட வேண்டும் என வலியுறுத்தி இராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.அத்துடன் அதனால் ஆசிரியர் மற்றும் மாணாக்கர்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் விளக்கி கூறினோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதில்   மாவட்டத்தலைவர் கா.சாமிஅய்யா, மாவட்டப் பொருளாளர் கதிரவன்  , ஓய்வு பெற்றோர் பிரிவு மாவட்டச் செயலாளர் மருது மற்றும் மாநில,மாவட்ட, வட்டார.நகரப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com