
கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் வியாழன் (20-04-2017) அன்று ஆசிரியப் பெருமக்களுக்கு வேலை சார்ந்த ஆய்வறிக்கை பற்றிய எழுத்து பயிற்சியரங்கம் (Thesis & Assignment Skills) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் சுமையா அறிமுக உரையுடன் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டாக்டர்.கனகராஜ், மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறை தொலை தூர கல்வி முன்னாள் மூத்த பேராசிரியர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் விளக்கங்கள் மற்றும் கேள்விகளுக்கு டாக்டர்.கனகராஜ் விளக்கமளித்தார்.
You must be logged in to post a comment.