அதிரடி விசாரனையில் இந்திய தொலைதொடர்பு ஆணையம்..

வெளிநாட்டில் குறைந்த வருமானத்தில் வேலைபார்த்து வரும் பெரும்பாலான மக்களுக்கு தொலைபேசியில் சொந்தங்களுடன் உரையாடுவதே அவர்களுக்கு கிடைக்கும் சந்தோசமாகும். ஆனால் பல நபர்கள் அவர்களுடைய தேவையை குறைந்த செலவில் செய்து தருவதாக கூறி இந்தியாவில் இருந்து முறைகேடான வழியில் தொலைபேசி வசதிகளை செய்து வந்தார்கள். சமீப காலத்தில் இது போன்ற செயல்பாடுகளை இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ( TRAI – Telecommunication Regulatory Authority of India) மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இராமநாதபுரம், பரமக்குடி அருகில் மூன்று நபர்களை விசாரனை வளைத்திற்குள் கொண்டு வந்தது,  தற்போது அவர்கள் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதாக கைது செய்து விசாரனையை தொடங்கியுள்ளது. ஆகவே வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும்.