கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் சலுகையை நழுவ விடாதீர்கள்..

மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தின்படி சுயநிதி தனியார் பள்ளிகளில் (சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் தவிர்த்து) 25 சதவீத சேர்க்கை ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை பெற்றோர்கள் இருந்த இடத்திலேயே www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம். பதிவு செய்தவுடன் அதை உறுதிபடுத்தக்கூடிய குறுஞ்செய்தி நாம் பதிவு செய்யும் மொபைல் எண்ணுக்கு வரும்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் அலுவலகம் போன்ற அனைத்து கல்வி அலுவலகங்களிலும் எந்த செலவுமின்றி விண்ணப்பங்களை பதிவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

அதே போல் மாநிலத்திலுள்ள 10ஆயித்திற்கும் மேற்பட்ட இ சேவை மையம் மூலமாகவும் விண்ணப்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஓரே பள்ளயில் 25 சதவீதத்திலும் மேலாக விண்ணப்பம் பெறப்பட்ட இருந்தால் குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

இந்த குலுக்கல் முறையை மாவட்ட ஆட்சித்தலைவர் நியமிக்கும் அலுவலர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மேற்பார்வையிடுவார்ரகள். மேலும் இந்த குலுக்கல் முறையில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவின் கீழ் வரும் ஆதரவற்றவர்கள், எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை குலுக்கலுக்கு முன்னரே முன்னுரிமை அளித்து சேர்க்கை வழங்கப்படும்.

தனியார் பள்ளயில் சேரக்கபட்டவர்களின் விபரங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பங்கள் ஏப்ரல் 20 முதல் மே 18ம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் வேலை வாய்ப்பில் சம உரிமை கிடைக்க முயற்சி செய்யவேண்டும்.