Home செய்திகள் பொதுத் துறை நிறுவனமான என்.எல்.சி.யின் 7% பங்குகளை ஆஃபர் ஃபார் சேல்ஸ் முறையில் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு..

பொதுத் துறை நிறுவனமான என்.எல்.சி.யின் 7% பங்குகளை ஆஃபர் ஃபார் சேல்ஸ் முறையில் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு..

by Askar

பொதுத் துறை நிறுவனமான என்.எல்.சி.யின் 7% பங்குகளை ஆஃபர் ஃபார் சேல்ஸ் முறையில் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு..

பொதுத் துறை நிறுவனமான என்.எல்.சி.யின் 7% பங்குகளை ஆஃபர் ஃபார் சேல்ஸ் முறையில் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. என்.எல்.சி. நிறுவனத்தின் 1 பங்கின் நேற்றைய விலை ரூ.226க்கு என்ற நிலையில், விலையை குறைத்து பங்கு ஒன்றை ரூ.212க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது பங்கின் தற்போதைய சந்தை விலையை விட 6% அதிகமாகும். முதலில் என்.எல்.சி.யின் சுமார் 6.9 கோடி பங்குகளை விற்பனை செய்யவும் வரவேற்பு அதிகமாக இருந்தால் மேலும் 2.77 கோடி பங்குகளை விற்பனை செய்யவும் ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக ஒன்றிய அரசு, ரூ.2000 கோடி முதல் ரூ.2,100 கோடி வரை நிதி திரட்ட உள்ளது.

என்.எல்.சி. இந்தியா கடந்த ஆண்டு ரூ. 400 கோடிக்கு மேல் நட்டத்தில் இருந்த நிலையில், 2023-2024ம் நிதியாண்டின் 3வது காலாண்டில் ரூ.250 கோடி நிகர லாபத்தை ஈட்டி இருந்தது. என்.எல்.சி. இந்தியாவில் ஒன்றிய அரசு தற்போது 79.2% பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. லாபத்தில் செயல்படும் பொதுத் துறை நிறுவனமான என்எல்சியின் பங்குகளை விற்கும் ஒன்றிய அரசின் முடிவு சர்ச்சைகளை எழுப்பி இருக்கிறது. பங்கு விற்பனை நடவடிக்கையால் இன்றைய பங்குச் சந்தையின் தொடக்கத்திலேயே என்எல்சியின் பங்கின் விலை, 3%த்திற்கும் மேல் சரிவடைந்து காணப்பட்டது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com