தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கல்லூரி பேராசிரியாக்ளுக்கு பயிலரங்கம்..

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் ‘தலைமைத்துவம்’ என்ற தலைப்பில் மூன்று நாட்கள் (08.06.2017 முதல் 10.06.2017 வரை) பயிலரங்கம் நடைபெற்றது.

இப்பயிலரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து விஸ்டம் கொலாப்ரேசன், ஹைதராபாத் ( Wisdom Colloboration) பயிலரங்க பயிற்சியாளர் அப்துல் முஜிபு கான், முதன்மை பயிற்சியாளராக இருந்து தலைமைத்துவம் பற்றி பல்வேறு கருத்துக்களை பகிர்நத்தார்.

மேலும் நிகழ்ச்சியில் ஷில்பா மேனன், தன்வீர் ராஷி போன்றோர் பயிற்சியார்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தார்கள்.

இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக பேராசிரியர்களுக்கு சுயஆளுமைத் திறன், மூளையின் செயல்பாடுகள், சுயஅனுபவங்களை உணர்தலின் மூலம் தன்னை அறிதல் போன்ற பயிற்சிகளை அளித்து ஊக்கப்படுத்தினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக பண்பரசி பாத்திமா, கணினித்துறை உதவிப்பேராசிரியை நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கல்லூரி உள்தர உத்திரவாதக் குழுவினர் செய்திருந்தனர்.