
கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 19.09.2017 அன்று காலை 10.30 மணியளவில் தேசிய ஹிந்தி தினம் கொண்டாடப்பட்டது. இறை வணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் சுனிதா ஹிந்தி துறை தலைவர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சுமையா அவர்கள் தலைமை உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர். அன்வர் ராஜா, இராமநாதபுரம் தொகுதி மற்றும் சமீரா அன்வர் ராஜா, டி.ஜி.டி கேந்திரிய வித்யாலயம், மதுரை ஆகியோர் கலந்து கொண்டார்கள். ஹிந்தி தினத்தை முன்னிட்டு பாட்டு, கதை சொல்லுதல் போன்ற விவாதமேடை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியாக ஹரிதா இளங்கலை முதலாம் ஆண்டு நுண்ணுயிரியல் மாணவி நன்றியுரை வழங்க இனிதே விழா நிறைவுற்றது.
You must be logged in to post a comment.