தாசீம் பீவி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் இலக்கிய மன்ற விழா பட்டி மன்றம்

கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இன்று (10-03-2017) தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக பட்டி மன்றம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பெரிதும் தேவை நல்லவர்களா..? வல்லவர்களா…? என்கிற சிறப்பான தலைப்பில் மாணவிகள் பங்கேற்று தங்கள் வலிமையான கருத்துக்களை முன் வைத்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் சுமையா தாவூத் தலைமை வகித்தார். பட்டி மன்றத்தின் நடுவராக இளையான்குடி டாக்டர் ஜாகிர் ஹுசைன் கல்லூரியின் தமிழ் துறை துணை தலைவர் அப்துல் ரஹீம் பொறுப்பேற்றிருந்தார். விழா ஏற்பாடுகளை தமிழ் துறை ஆசிரிய பெருந்தகைகள் சிறப்பாக செய்திருந்தனர்.