Home செய்திகள் கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் திருச்சபை பணியாளர்கள்இயற்கை மரணம் அடைந்தால் ரூ.20,000 உதவித்தொகை.! விளக்கம் தருகிறார் ஜெபசிங்..

கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் திருச்சபை பணியாளர்கள்இயற்கை மரணம் அடைந்தால் ரூ.20,000 உதவித்தொகை.! விளக்கம் தருகிறார் ஜெபசிங்..

by Askar

 கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் திருச்சபை பணியாளர்கள்இயற்கை மரணம் அடைந்தால் ரூ.20,000 உதவித்தொகை.! விளக்கம் தருகிறார் ஜெபசிங்..

இது சம்பந்தமாக தமிழ்நாடு திருச்சபை பணியாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல சங்கம் (டாஸ்) மாநில செயலாளர் ஜெபசிங் விளக்கம் அளிக்கிறார்!

தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்துவ அநாதை இல்லங்கள், தொழு நோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் பணிச் சான்று. ஆதார் அட்டை நகல். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல். பாஸ்போர்ட் புகைப்படம் 2. குடும்ப அட்டை நகல். வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் அலுவலகத்தில் கொடுக்கப்பட வேண்டும்

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரால் விண்ணப்ப படிவங்கள் சரிபார்க்கப்பட்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.

மேற்படி இவ்வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை 10ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்பு, தொழிற் கல்வி படிப்பு வரையும், விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகையாக ரூ.1,00,000 வழங்கப்படும். விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகையாக ரூ.10,000 முதல் ரூ.1,00,000 வரையும், இயற்கை மரணம் உதவித்தொகையாக ரூ.20,000, ஈமச்சடங்கு உதவித்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் .

மேலும் திருமண உதவித்தொகையாக ஆண்களுக்கு ரூ.3,000, பெண்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும். மகப்பேறு உதவித்தொகையாக ரூ.6,000, கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு உதவித்தொகையாக ரூ.3,000, கண் கண்ணாடி உதவித்தொகையாக ரூ.500, முதியோர் ஓய்வூதியமாக (மாதந்தோறும்) ரூ.1,000 நலத்திட்ட உதவியாக வழங்கப்படும் என டாஸ் மாநில செயலாளர் சகோ.ஜெபசிங் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்கள் தேவைப்படின் கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பு எண்.☎️ 8144069997

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!