Home செய்திகள்உலக செய்திகள் கல்விக்கூட வாசலை மதுபாராக மாற்றிய அவலம்; மது அருந்தும் வீடியோ வைரல்..

கல்விக்கூட வாசலை மதுபாராக மாற்றிய அவலம்; மது அருந்தும் வீடியோ வைரல்..

by Abubakker Sithik

கல்விக்கூட வாசலை மதுபாராக மாற்றிய அவலம்; பள்ளியின் முன்பு மது அருந்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்..

பள்ளி கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே மதுபான கடைகள் செயல்படக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் மதுரை கோச்சடை பகுதியில் சில தினங்களுக்கு முன் 5105 என்ற எண் கொண்ட, பார் இல்லாத டாஸ்மாக் கடை ஒன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட டாஸ்மாக் கடையின் மிக அருகில் தனியார் பள்ளி உள்ளதாக கூறப்படுகிறது.

மேற்கண்ட டாஸ்மாக் அமைந்துள்ள பகுதியில் இருந்து தனியார் பள்ளியானது 100 மீட்டர் தூரம் கூட இல்லை எனவும், மேற்கண்ட டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கும் நபர்கள் அப்பள்ளியின் வாசலிலேயே அமர்ந்து மது அருந்தும் சூழ்நிலையும் உள்ளாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழக அரசு ஏற்கனவே பள்ளி கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்புகளை விடுத்துள்ள நிலையில், கோயில் மற்றும் பள்ளிகளுக்கு நடுவே அமைந்துள்ள டாஸ்மாக் கடை எண் 5105-ஐ உடனடியாக மூட நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வருக்கு புகார் அளித்துள்ளனர்.

தற்போது இந்த டாஸ்மாக் கடையில் மது வாங்கி விட்டு தனியார் பள்ளிக்கூட வாசலில் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கல்வியை கற்க செல்லும் சிறுவர்களுக்கு இந்த மதுவை கற்க இது போன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பள்ளி அருகே உள்ள மதுபான கடையை மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!