கீழக்கரையில் மாபெரும் மதுக்கடை முற்றுகை போராட்டம்..

கீழக்கரையில் இன்று (10-12-2017) புதிய பஸ்நிலையம் அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் முற்றுகை போராட்டம் தமிழக முன்னேற்ற கழகம் சார்பாக நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு தமிழக முன்னேற்ற கழகம் மாநில தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார்,  செயலாளர் ரஹ்மான் முன்னிலையில் அனைத்து நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் இம்மதுவினால் பாதிக்கப்படும் குடும்ப பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு கீழக்கரை காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

1 Comment

Comments are closed.