Home செய்திகள் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் இணைப்புச்சக்கரங்கள் பொருத்தப்பட்ட பைக் வழங்க வேண்டும்-TARATDAC ஆத்தூர் ஒன்றிய கிளை நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்..

மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் இணைப்புச்சக்கரங்கள் பொருத்தப்பட்ட பைக் வழங்க வேண்டும்-TARATDAC ஆத்தூர் ஒன்றிய கிளை நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்..

by ஆசிரியர்

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஆத்தூர் ஒன்றிய கிளை நிர்வாகிகள் கூட்டம் 08.05.19 அன்று மாலை 05.00 மணியளவில் ஆதி லட்சுமிபுரத்தில் உள்ள அகரத்தம்மன் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது.

சங்கத்தின் ஆத்தூர் ஒன்றிய தலைவர் வனிதா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பகத்சிங், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகவள்ளி ஆகியோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். இக்கூட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசு தற்போது இரண்டுகால் ஊனமுற்ற 75% ஊனத்திற்கு அதிகமாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் பைக் வழங்கி வருகிறது. ஒரு கால் துண்டிக்கப்பட்ட மற்றும் 75% ஊனத்திற்கு கீழ் உள்ள எந்த மாற்றுத்திறனாளிக்கும் மோட்டார் பொருத்திய பைக் வழங்குவதில்லை.

இன்றைய வேகமான உலகத்தில் ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு மூன்று சக்கர சைக்கிளில் செல்வது என்பது இயலாத காரியம்.

எனவே, தமிழக அரசு அனைத்து நிபந்தனைகளையும் தளர்த்தி இடுப்புக்கு மேல் உடல்நிலை நன்றாக இருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் பைக் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் சித்தரேவு கிளை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!