தமிழக – கேரள எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம்: நக்சல் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை..

தமிழக – கேரள எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து நக்சல் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட மாவோயிஸ்ட் பெண் ஒருவர் சிகிச்சைக்காக ஆனைக்கட்டி வழியே தமிழகத்துக்கு வர உள்ளதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கோவை மாவட்டம், தமிழ -கேரள எல்லையில் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் புகைப்படங்கள் எல்லையோர பகுதிகளில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி மலைகிராம மக்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய நக்சல் தடுப்பு போலீஸாரும், உள்ளூர் போலீஸாரும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.