Home செய்திகள் தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு!- விரிவான ஓர் பார்வை..

தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு!- விரிவான ஓர் பார்வை..

by Askar

தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு!- விரிவான ஓர் பார்வை..

வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம்.

சென்னை பூவிருந்தவல்லி அருகே திரைப்பட நகரம் அமைக்க ₹500 கோடி ஒதுக்கீடு.

 நாமக்கல்லில் ₹358 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

 சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு.

 சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ₹300 கோடி ஒதுக்கீடு.

சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ₹100 கோடி ஒதுக்கீடு.

வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ₹1000 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்க ‘முதலமைச்சர் தாயுமானவர்’ திட்டம் செயல்படுத்தப்படும்.

 கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும்.

கீழடியில் திறந்தவெளி அரங்கு ₹17 கோடி செலவில் அமைக்கப்படும்.

 சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்.

நகர்ப்புற பசுமை திட்டம்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்;

மதுரை மற்றும் சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநிர் விநியோகம் செய்யப்படும்.

ரூ.1,517 கோடி மதிப்பீட்டில் நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ₹5 கோடி ஒதுக்கீடு.

அடையாறு நதி சீரமைப்புக்கு ₹1500 கோடி ஒதுக்கீடு.

சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ₹100 கோடி ஒதுக்கீடு.

 சென்னை மாநகரில் பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்த ₹430 கோடியில் புதிய திட்டம்.

 மலைப்பகுதிகளிலும் மகளிர் இலவசப் பேருந்து திட்டம் தொடங்க ரூ. 3,050 கோடி நிதி ஒதுக்கீடு.

உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் – பட்ஜெட்டில் அறிவிப்பு.

பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ₹300 கோடியில் உருவாக்கப்படும்

 இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ₹100 கோடி ஒதுக்கீடு.

 பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்த ₹1000 கோடி ஒதுக்கீடு.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com