தமிழை வளர்த்த மதுரையில், விமான நிலையத்தில் தமிழுக்கு பஞ்சம்..

“தமிழ் மெல்ல சாகும்” எனக் கூறினார்கள், ஆனால் இதை அரசாங்கம் தமிழ் வளர்த்த மதுரை நகரிலே தொடங்கியதுதான் மிகவும் வேதனையான விசயம்.

மதுரை விமான நிலையத்தில் தமிழ் என்பதற்கான அடையாளமே இல்லாத அளிவிற்கு, அறிவிப்போ அல்லது அறிவிப்பு பலைகையோ எதுவுமே இல்லை, அனைத்தும் தமிழில் இருந்து மாறி ஆங்கிலம் மற்றும் இந்தி மயமாகவே உள்ளது.

இது பற்றி சமீபத்தில் மதுரை விமான நிலையம் வழியாக பயணம் சென்ற கீழக்கரையைச் சார்ந்த நஜீம் மரைக்கா கூறுகையில், “தமிழர்களே அதிக அளவில் பயணிக்க கூடிய விமான நிலையத்தில் தமிழ் என்ற அடையாளம் இல்லாத அளவுக்கு இருட்டடிப்பு செய்திருப்பது, தமிழர்களான அனைவரையும் அவமானப்படுத்தும் செயலாகும். தமிழுக்காக குரல் கொடுப்பவர்களும், போராடுபவர்களும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இந்த சம்பவங்களை பார்க்கும் பொழுது சமீபத்தில் ஒரு கன்னட பிரபல எழுத்தாளர் கூறிய “வடக்கில் இருந்து வந்து இன்று பெங்களூர் மட்டுமல்லாது கர்நாடகா மாநிலத்தையே ஹிந்தியால் ஆக்கிரமித்து விட்டார்கள், கடந்த காலங்களில் கட்டமைப்பாக இருந்த தமிழகத்திலும் தற்பொது ஊடுருவது, மிகவும் வேதனையளிக்கிறது” என்ற வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகிறது.