Home செய்திகள் தமிழ்நாடு பாரத சாரண இயக்கம் மாநில அளவிலான திறன் வளர்ப்பு பயிற்சி

தமிழ்நாடு பாரத சாரண இயக்கம் மாநில அளவிலான திறன் வளர்ப்பு பயிற்சி

by mohan

தி.மலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு பாரத சாரணர் இயக்கத்தின் சார்பில் சென்னை மண்டலம் மற்றும் தி.மலை மண்டலம் சார்ந்த மாநில அளவிலான பாரத சாரண சாரணியர் இயக்க ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் திறன் வளர்ப்பு பயிற்சி வெகு சிறப்பாக பட்டறை  நடைபெற்றது. மாநில அளவிலான திறன் வளர்ப்பு பயிற்சியை எஸ்.கே.பி.கல்விக்குழுமத்தின் தலைவர் கு.கருணாநிதி, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் து.கணேசமூர்த்தி ,மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கார்த்திகேயன், ஆகியோர் பயிற்சி பட்டறை குத்துவிளக்கு ஏற்றி தொடக்க வைத்து பேசினார்.கல்விக்குழுமத்தின் இணை செயலர் கே.வி. அரங்கசாமி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி ஆர்.சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில ஆணையர் வயது வந்தோர் வளம் (சாரணர் பிரிவு) முத்துகிருஷ்ணன், மாநில பயிற்சி ஆணையர் (சாரணர் ) நாகராஜன் மாநில அமைப்பு ஆணையர் (சாரணர் ) சக்திவேல், மாநில ஆணையர் வயது வந்தோர் வளம் (சாரணியர்)அலமேலு, மாநில பயிற்சி ஆணையர்(சாரணியர்) அருள் மேரி, மாநில அமைப்பு ஆணையர்(சாரணியர்) கோமதி ஆகியோர் மூன்று நாட்களாக நடைபெற்ற திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறை நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இராஜ்யபுரஸ்கார் தேர்வு முகாம் குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டது. மேலும் எஸ்.கே.பி கல்லூரியின் திரிசாரண திரிசாரணியர் மாணவர்களின் தொடக்க விழா மாநில ஆணையர் முத்துகிருஷ்ணன், அலமேலு தொடக்கி வைத்து பேசினார் மேலும் மூத்த சாரணப் பயிற்சியாளர் சீனிவாச வரதன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்று நாட்களாக நடந்த திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறையில் சென்னை மண்டலம் மற்றும் திருவண்ணாமலை மண்டலம் சேர்ந்த சாரணர் மற்றும் சாரணிய ஆசிரியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர். தி.மலை மாவட்ட செயலாளர் கா.பியூலா கரோலின் நன்றி கூறினார்.   எஸ்.கே.பி கல்லூரியின் சாரணிய ஆசிரியர்  இரமாகாவ்யா மற்றும் ஆசிரியர் முத்து குழுவினர் ஒருங்கிணைப்பு பணி செய்தனர்.இதில் கல்லூரி முதல்வர் டாக்டர். பாஸ்கரன், மக்கள் தொடர்பு அலுவலர் சையத் ஜஹிருத்தின் கலந்துகொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!