உணவு பாதுகாப்பு துறை ஆணையர் தலைமையில் ஸ்வஸ்த் பாரத் யாத்ரா..

தமிழகத்தில் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் திருமதி. அமுதா IAS  தலைமையில் ஆரோக்கிய பாரத பயணம்- ஸ்வஸ்த் பாரத் யாத்ரா சைக்கிள் பேரணி திருவனந்தபுரத்தில் 16.10.2018ல் ஆரம்பித்து 27.01.2019 டில்லியில் முடிவடைகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர், நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு அலுவலர்களால் 29.10.2018 அன்று பாண்டியராஜபுரத்தில் வருகை செய்யும் சைக்கிள் பேரணியை வரவேற்று 31.10.2018 கரூர் மாவட்டத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது. வழியில் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் உணவு பொருள் தரமான பொருளா என சோதனை செய்ய ஆய்வு செய்யும் வாகனம் இந்த பயணத்தில் வருகின்றது.

பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவியர், பள்ளி மாணவ, மாணவியர், சமூக ஆர்வலர்கள் பயன்படுத்தி கொள்ள உணவு பாதுகாப்புத்துறை தங்களை அன்புடன் கேட்டு கொள்கின்றது. காந்திகிராம பல்கலைக்கழகம், புனித பேட்ரிக் பள்ளி, காலனம்பட்டி, வேடசந்தூர் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும் நடத்தப்படவுள்ளது. பாண்டியராஜபுரம் ஆர்யநிவாஸ், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஹோட்டல் ஆர்த்தி, கல்வார்பட்டி ஆகிய இடங்களில் விழிப்புணர்வு கண்காட்சிகளும் வரவேற்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளது. ஆரோக்கியமான பாரதத்தை உருவாக்கிட அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றது. இதில் மாவட்ட ஆட்சியர், சட்ட மன்ற உறுப்பினர்கள், மந்திரிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .