ரூ.1 கோடி கையாடல்: சங்ககரி பேரூராட்சி செயலர் ‘சஸ்பெண்ட்..

ஒரு கோடி ரூபாய் கையாடல் செய்த வழக்கில், சங்ககிரி பேரூராட்சி செயலர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சி செயல் அலுவலர் வீரபாண்டியன், 55, இவர் மீது, வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர், கடை வாடகை மற்றும் சுங்க கட்டணம் உள்ளிட்ட வருவாய் இனங்களில் வசூலித்த தொகையை, பேரூராட்சி கணக்கில் வரவு வைக்காமல், கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக நடந்த தணிக்கையில், மூன்றாண்டுகளாக தொடர் மோசடி, அத்துடன் போலி ரசீது போட்டு, மொத்தமாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கையாடல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இது குறித்த அறிக்கை, தமிழக பேரூராட்சிகளின் இயக்குனர் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அதன் எதிரொலியாக, வீரபாண்டியனை சஸ்பெண்ட் செய்து, இயக்குனர் சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த கையாடல் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த, பேரூராட்சி ஊழியர்கள் குறித்து, தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருவதாக, சேலம் மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர் முருகன் தெரிவித்துள்ளார். 2021ல், பணி ஓய்வு பெறும் வீரபாண்டியன், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#Paid Promotion