தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..

தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சுரண்டை பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..

தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு வாகன ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சுரண்டை பகுதியில் நடந்தது. நிகழ்ச்சியில் தென்காசி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நிலை 1 கனகவல்லி தலைமை வகித்து டிராக்டர் மற்றும் பின்பகுதியில் எச்சரிக்கை விளக்கு பொறுத்தாத வாகனங்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் அணிதல் மற்றும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்தல் குறித்து விளக்கினார். இந்நிகழ்வில் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரி தாளாளர் ராஜகுமார், குலையநேரி முருகன், கீழச்சுரண்டை பாக்கியராஜ், சுரண்டை சமூக ஆர்வலர் மாடசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்