Home செய்திகள்உலக செய்திகள் விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் பயணம் செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 19, 1965).

விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் பயணம் செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 19, 1965).

by mohan

சுனிதா வில்லியம்ஸ் ( Williams) செப்டம்பர் 19, 1965ல் இந்தியத் தந்தைக்கும், சுலொவீனியத் தாய்க்கும் யூக்ளிட், ஒஹைய்யோவில் பிறந்தார். மசாச்சூசெட்ஸ் நீடாம் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று 1983ல் தேர்ச்சி பெற்றார். அதனைத் தொடர்ந்து அமெரிக்க கப்பற்படை அகாதமியில் இருந்து அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டத்தை 1987ல் பெற்றார். 1995 ஆம் ஆண்டு புளோரிடா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் இருந்து பொறியியல் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அமெரிக்க கப்பல்படையில் இளநிலை அதிகாரியாக பணி புரியும் வாய்ப்பை அமெரிக்க கப்பல்படை அகாதமியிடம் இருந்து மே 1987ல் வில்லியம்ஸ் பெற்றார். 1989ல் கப்பல்படை விமானியாக நியமிக்கப்பட்ட வில்லியம்ஸ், கப்பல்படையின் சோதனை பைலட் பள்ளியில் 1993ல் பட்டம் பெற்றார். நாசாவால் ஜூன் 1998ல் தேர்ந்தெடுக்கப்பட்ட வில்லியம்ஸ் தனது பயிற்சியை ஆகஸ்டு 1998ல் துவக்கினார்.

சுனிதா வில்லியம்ஸ்ன் விண்வெளி வீரருக்கான பயிற்சியில், பழக்கமடைதல் விவரங்கள் மற்றும் விளக்கங்கள், ஏராளமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விளக்கங்கள், விண்வெளிக் கலம் மற்றும் விண்வெளி நிலைய அமைப்புகளில் செறிவான விளக்கங்கள், டி-38 விமான பயிற்சிக்கு தயாரிப்பு செய்யும் வகையிலான உடல்ரீதியான பயிற்சி மற்றும் தரை கல்வி, அத்துடன் நீர் மற்றும் இனம்புரியாத இடங்களில் உயிர்தப்பிக்கும் நுட்பங்களை கற்பது ஆகியவை அடக்கம். மூன்று முறை நடந்து விண்வெளியில் அதிகமுறை நடந்திருக்கும் பெண் என்னும் சாதனையை காத்ரின் தார்ன்டன் செய்திருந்தார். அதனை இவர் முறியடித்தார். அதன்பின் அவரது சாதனையை முறியடித்து பெகி விட்சன் அதிக விண்வெளி நடை சாதனை பெண்ணாக ஆனார். பயிற்சி மற்றும் மதிப்பீடு காலத்தைத் தொடர்ந்து, வில்லியம்ஸ் மாஸ்கோவில் ரஷ்ய விண்வெளி அமைப்புடன் இணைந்து அவிநிக்கு ரஷ்யா பங்களிக்கும் பணியிலும், அவிநிக்கு அனுப்பப்பட்ட முதல் விண்வெளிப் பயண குழுவிலும் செயலாற்றினார்.

விண்வெளி பயணம் 1 முடிந்து திரும்பியதும், வில்லியம்ஸ் ISS ரோபாடிக் உறுப்பில் ரோபாடிக் கிளையிலும் அது தொடர்பான “சிறப்பு நோக்க லாவக மெனிபுலேட்டர்” (Special Purpose Dexterous Manipulator) இலும் பணிபுரிந்தார். நீமோ 2 திட்டத்தில் ஒரு குழு உறுப்பினரான அவர், மே 2002ல் ஒன்பது நாட்களுக்கு நீர் வாழ்விடத்தில் நீருக்கடியில் வசித்தார். பல விண்வெளி வீரர்களைப் போல, வில்லியம்சும் ஒரு உரிமம் பெற்ற அமெச்சூர் ரேடியோ ஆபரேட்டர் ஆவார். 2001ல் டெக்னிசியன் பிரிவு உரிமம் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பெடரல் தொடர்பு வாரியம் இவருக்கு அழைப்பு குறியீடு KD5PLB ஐ ஆகஸ்டு 13ல் வழங்கியது. ISSல் இருந்த இரண்டு அமெச்சூர் வானொலி நிலையங்களில் ஒன்றைப் பயன்படுத்தி அவர் பள்ளிக் குழந்தைகளுடன் பேசினார். STS-116 உடனான சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி பயணம் 14 உறுப்பினர்களுடன் இணைந்து கொள்வதற்காக டிசம்பர் 9, 2006ல் டிஸ்கவரி விண்வெளிக் கலத்தில் வில்லியம்ஸ் அனுப்பப்பட்டார். ஏப்ரல் 2007ல், ரஷ்ய உறுப்பினர்கள் சுழற்சி செய்யப்பட்டனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) வில்லியம்ஸ் தன்னுடன் எடுத்துச் சென்ற சொந்த பொருட்களில், ஒரு பகவத் கீதை புத்தகம், ஒரு பிள்ளையார் படம் மற்றும் சில சமோசாக்கள் இருந்தன. டிஸ்கவரியில் சென்ற பின், வில்லியம்ஸ் தனது குதிரைவால் தலைமுடியை “லாக்ஸ் ஆஃப் லவ்” அமைப்புக்கு அளிக்க ஏற்பாடு செய்தார். சக விண்வெளி வீரரான ஜோன் ஹிக்கின்பாதம் முடிவெட்டியதானது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு உள்ளாக நிகழ்ந்தது. அத்துடன் இந்த குதிரைவால் முடியானது பூமிக்கு கொண்டுவரப்பட்டது. வில்லியம்ஸ் தனது முதல் “கூடுதல்வாகன செயல்பாட்டை” (extra-vehicular activity) STS-116ன் எட்டாவது நாளில் மேற்கொண்டார். ஜனவரி 31, 2007, பிப்ரவரி 4, மற்றும் பிப்ரவரி 9, 2007 ஆகிய நாட்களில் அவர் “மைக்கேல் லோபஸ்” (அல்ஜீரியா) உடன் இணைந்து ISS இல் இருந்து மூன்று விண்வெளி நடைகளை நிறைவு செய்தார். இந்த நடைகளில் ஒன்றின்போது ஒரு புகைப்படக்கருவி அவிழ்ந்து, அநேகமாக இணைப்பு சாதனம் செயலிழந்து இருக்கலாம். வில்லியம்ஸ் செயல்படும் முன்பே வான்வெளியில் மிதந்தது.

மூன்றாவது விண்வெளி நடையின் போது நிலையத்திற்கு வெளியே மொத்தம் 6 மணி நேரம் 40 நிமிடங்கள் இருந்த வில்லியம்ஸ் ஒன்பது நாட்களில் மூன்று விண்வெளி நடைகள் மேற்கொண்டார். நான்கு விண்வெளி நடைகளில் அவர் 29 மணிகள் மற்றும் 17 நிமிடங்களைப் பதிவு செய்தார். ஒரு பெண் மேற்கொண்ட அதிக விண்வெளி நடை நேரத்திற்கான காத்ரின் சி. தார்ன்டன் செய்திருந்த சாதனையை அவர் விஞ்சினார். டிசம்பர் 18, 2007 இல், விண்வெளி பயணம் 16 இன் நான்காவது விண்வெளிநடையின் போது, பெகி விட்சன் வில்லியம்சை விஞ்சினார், அதுவரையான மொத்த EVA நேரம் 32 மணி, 36 நிமிடங்கள். மார்ச் 2007 ஆரம்பங்களில் கொஞ்சம் கூடுதல் காரமான உணவு வேண்டும் என்று அவர் கோரியதை அடுத்து ஒரு புரோகிரஸ் விண்கல பயணத்தில் ஒரு டியூப் வசாபியை அவர் பெற்றார். டியூபைத் திறந்து ஒரு வளிமண்டல அழுத்தத்தில் அடைக்கப்பட்டிருந்த ஜெல் போன்ற பசை ISSன் குறைவான அழுத்தத்தில் பிதுக்கி எடுக்கப்பட்டது. சாதாரணமாக பறக்கும் சுற்றுப்புறத்தில், காரமான சுடுபீச்சினை அடக்கி வைப்பது கடினம்.

வில்லியம்ச்சை STS-117 பயணத்திட்டத்தில் அட்லாண்டிஸ் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்ப அழைப்பது என்று ஏப்ரல் 26, 2007ல் முடிவு மேற்கொள்ளப்பட்டதால், அவரால் அமெரிக்காவின் தனிநபர் விண்வெளிவிமான சாதனையை முறியடிக்க முடியவில்லை. அந்த சாதனை சமீபத்தில் முந்தைய குழு உறுப்பினரான கமாண்டர் “மைக்கேல் லோபஸ்” (அல்ஜீரியா) மூலம் முறியடிக்கப்பட்டது. ஆயினும் அவர் அதிக காலம் ஒற்றை விண்வெளிவிமானப் பயணம் செய்த பெண்ணுக்கான சாதனையை செய்திருக்கிறார். வில்லியம்ஸ் STS-117ல் திட்ட நிபுணராகப் பணியாற்றி, பூமிக்கு STS-117 பயணத் திட்ட முடிவில் ஜூன் 22, 2007 அன்று பூமி திரும்பினார். விண்வெளிக் கலமான அட்லாண்டிஸ் கலிபோர்னியாவின் எட்வர்ட்ஸ் விமானப் படை விமானத்தளத்தை EDT நேரப்படி காலை 3:49 க்கு தொட்டது. சாதனை அளவாக 195 நாளை விண்ணில் கழித்த வில்லியம்ஸ் தாயகம் திரும்பினார்.

பயணத்திட்ட மேலாளர்கள் அட்லாண்டிஸை மொஜாவே பாலைவனத்தின் எட்வர்ட்ஸ் பகுதிக்கு திருப்ப நேர்ந்தது. ஏனென்றால் மோசமான காலநிலை காரணமாக கேப் கனவிரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் தரையிறக்க முடியாமல் முந்தைய 24 மணி நேரத்தில் மூன்று தரையிறங்கும் முயற்சிகளை அவர்கள் தவிர்க்கும் நிர்ப்பந்தம் நேர்ந்தது. மீண்டும் நல்வரவு, ஒரு பெரும் பயணத்திட்டத்தை மேற்கொண்டமைக்கு வாழ்த்துக்கள்” விண்கலம் தரையிறங்கியதும் நாசா திட்ட கட்டுப்பாட்டு குழுவினர் வில்லியம்ஸ் மற்றும் மற்ற ஆறு குழு உறுப்பினர்களுக்கும் இவ்வாறு வாழ்த்து கூறினர். தரையிறங்கிய பிறகு, 41 வயது சுனிதா ஏபிசி தொலைக்காட்சி நிறுவனத்தினால் “அந்த வாரத்தின் சிறந்த மனிதராக” தேர்ந்தெடுக்கப்பட்டார். நோயுடன் போராடி தங்கள் தலைமுடியை இழந்திருப்போருக்கு உதவும் வகையில் டிசம்பரில் தனது நீண்ட முடியை அவர் தியாகம் செய்ததை அந்த தொலைக்காட்சி நினைவுகூர்ந்தது.

சுனிதா வில்லியம்ஸ் செப்டம்பர் 2007ல் இந்தியாவுக்கு பயணம் வந்தார். 1915 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியால் அமைக்கப்பட்ட ஆசிரமமான சபர்மதி ஆசிரமத்திற்கும், குஜராத்தில் தனது முன்னோர்கள் வாழ்ந்த கிராமமான ஜுலாசானுக்கும் அவர் சென்று பார்வையிட்டார். அவருக்கு உலக குஜராத்தி சமூகம் வழங்கிய “சர்தார் வல்லபாய் படேல் விஸ்வ பிரதீபா விருது” கிடைத்தது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய குடியுரிமை இல்லாத வெளிநாடு வாழ் இந்தியர்” இவராவார். தனது சகோதரி மகன் பிறந்தநாளை ஒட்டி தனது உறவினர் வீட்டுக்கும் அவர் சென்றிருந்தார். அக்டோபர் 4, 2007ல் அமெரிக்க தூதரக பள்ளியில் பேசிய வில்லியம்ஸ், பின் இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டிலை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார்.

வில்லியம்ஸ் மைக்கேல் வில்லியம்சை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இந்த இருவருக்கும் திருமணமாகி 16 வருடங்களுக்கும் அதிகமாக ஆகிறது. இருவருக்கும் குழந்தைகள் இல்லை என்றாலும், இவர்கள் கோர்பி என்ற பெயரில் நாய் ஒன்றினை வளர்க்கிறார்கள். அவரது பொழுதுபோக்கு ஆர்வங்களில் ஓடுவது, நீந்துவது, பைக் ஓட்டுவது, டிரையத்லான் விளையாட்டு, காற்றோட விளையாட்டு, பனிச்சறுக்கு மற்றும் வில் வேட்டை விளையாட்டு ஆகியவை அடக்கம். நேவி கமென்டேஷன் விருது (இருமுறை), நேவி மற்றும் மரைன் கார்ப்ஸ் சாதனை விருது, மனிதாபிமான சேவை விருது மற்றும் பல்வேறு பிற சேவை விருதுகள் பெற்றுள்ளார். விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்த சாதனையை (195 நாட்கள்) அவர் கொண்டிருக்கிறார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com