இராமநாதபுரத்தில் அமமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு..

இராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே அமமுக., சார்பில் கோடை கால நீர், பந்தல் திறப்பு விழா நடந்தது. மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் ஜி. முனியசாமி திறந்து வைத்தார்.

மாநில மகளிரணி இணை செயலாளர் கவிதா சசிகுமார், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பைராம் கான், ஒன்றிய செயலாளர்கள் கே.பி.முத்தீஸ்வரன் (ராமநாதபுரம்), ஸ்டாலின் (எ) ஜி.எம்.ஜெயச்சந்திரன் (மண்டபம்), மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தவமுனியசாமி, முன்னாள் கவுன்சிலர் செல்வம் உள்பட கலந்து கொண்டனர். ஆயிரம் லிட்டர் மோர், ஆயிரம் லிட்டர் குளிர்பானம், 200 இளநீர் , 100 தர்ப்பூசணி மற்றும் வெள்ளரிக்காய் வழங்கப்பட்டது.