இலந்தைகுளம் கண்மாயில் உள்ள உயரமான மரத்தின் கிளையில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் உடல்… கொலையா?? தற்கொலையா??…

மதுரை மாவட்டம் கிழக்கு தாலுகாவில் உள்ள இலந்தைகுளம் கண்மாயில் உள்ள உயரமான மரத்தின் கிளையில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சேலத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் வயது 22 வாலிபர் தூக்கிலிட்டு தற்கொலை பிரேத உடலை மீட்டு கொலையா தற்கொலையா என புதூர் போலீசார் தீவிர விசாரணை.

மதுரை மாவட்டம் கிழக்கு தாலுகாவில் உள்ள இலந்தைகுளம் கண்மாயில் உள்ள உயரமான மரத்தில் கிளையில் சேலத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஜெயபிரகாஷ் வயது 22, உடல் தொங்கிக்கொண்டிருந்தது.  அதனை அப்பகுதியில் சென்ற இளைஞர்கள் பார்த்துள்ளனர். அதன்பின்பு தகவலை இலந்தைகுளம் தலையாரி அண்ணா துறையிடம் தெரிவித்துள்ளனர். அவர் புதூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் புதூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் தொங்கி க்கொண்டிருந்த பிரேத உடலை மீட்டு கொலையா தற்கொலையா என புதூர் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இறந்தவர் சென்னையில் உள்ள ஹுண்டாய் கார் நிறுவனத்தில் மார்ச் மாதம் வரை வேலை பார்த்ததாகவும் அவர் சேலத்தை சேர்ந்தவர் என்பதும் அவரது பையில் ரூபாய் 4000 ரொக்கப்பணம் ஹெட்போன் இருந்ததையும் காவல்துறையினர் பத்திரமாக விசாரணைக்காக எடுத்து வைத்தனர் காவல்துறையினர் செல்போனை தேடிய பொழுது கிடைக்கவில்லை அது மர்மமாக இருந்தது. மேலும் கொலை செய்துவிட்டு மரத்தில் தொங்க விட்டனரா? அல்லது அவரே மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து புதூர் காவல்துறையினர் தீவிர புலன் விசாரணை செய்து வருகின்றனர் வாலிபர் மரத்தில் தொங்கும் சம்பவத்தை கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அப்பகுதிக்கு வந்து பிரேத உடலை பார்த்து சென்றனர். இச்சம்பவம் கிழக்கு தாலுகாவில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்