49
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டை-பிரவான்பட்டியை சேர்ந்த சாந்தி என்பவர் தங்களது உறவினர் பழனிச்சாமி என்பவர் தனக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை அபகரித்து கொண்டதாகவும் சொத்துக்களை மீட்டு தரக்கோரியும் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், இன்று (19/11/2018) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாந்தி என்பவரும் அவரது தாயார் பழனி அம்மாவும் தீக்குளிக்க முயற்சித்தனர்.
பின்னர் அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, சமாதானம் செய்து ஆட்சியர் மூலம் தக்க நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதாக உறுதியளித்தனர்.
மாவட்ட செய்தியாளர்:- பக்ருதீன்
You must be logged in to post a comment.