இராமநாதபுரம் ஆதம் நகரைச் சேர்ந்தவர் ஆயிஷா பேகம், 36. இவரது கணவர் ஜமீல் கானுக்கு சேர வேண்டிய சொத்து பங்கு தொகை ரூ.41 லட்சம், மற்றும் அவவருடைய தங்கைக்கு கடனாக கொடுத்த தொகை ரூ.4 லட்சத்தை அவருடைய கணவர் ஹாஜா மைதீன் முறை கேட்டும் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட ரஹீம் உள்பட 3 பேரும் தன்னை மோசடி செய்து விட்டதாக கேணிக்கரை போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் ஆயிஷா பேகம் கொடுத்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டவில்லை என்ற காரணத்தால் மனமுடைந்த ஆயிஷா பேகம், இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள 200 அடி உயர தொலை தொடர்பு கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
பின்னர் 20 அடி உயரமே ஏறிய நிலையில் ஆயிஷா பேகத்தை அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். இது குறித்து குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து துரித விசாரனை நடத்தினர். இதை தொடர்ந்து ஆயிஷா பேகம் போலீசில் மேலும் ஒரு புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.