உசிலம்பட்டியில் மகன்கள் கொடுமைப்படுவத்துவதாக கூறி தந்தை தற்கொலை மிரட்டல்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கணவாய்ப்பட்டியைச் சேர்ந்தவர் பவுன்ராஜ் (54). இவருக்கு அபிசேக் (19), கரன் (17) என இரண்டு மகன்கள் உள்ளன. பவுன்ராஜ் தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரண்டு மகன்களும் தினமும் தன் தந்தைக்கு அறிவுரை வழங்கிவந்தனர். இதனைதொடர்ந்து இன்று காலையிலேயே மதுகுடித்துவிட்டதை அறிந்த இரண்டு மகன்கள் கொடுமைப்படுத்தி அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மணமுடைந்த பவுன்ராஜ் இரு மகன்களும் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி அருகில் இருந்த மின்சார கோபுரத்தில் ஏறி வெயிலையும் பொருட்படுத்தாமல் சுமார் 2மணி நேரம் மேலேயே நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

தகவலறிந்த உசிலம்பட்டி தீயனைப்புத்துறையினர் அவரை பத்திரமாக மீட்டு சேடபட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பவுன்ராஜிடம் சேடபட்டி போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.