மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன்குளம் பகுதியில் வயல் வெளியில் உள்ள கிணற்றில் கர்ப்பிணிப் பெண் இரண்டு வயது மகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநகர் போலீசார் திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து மீட்பு படையினர் கிணற்றில் இறங்கி தேடிய போது தாய் மகள் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டது. திருநகர் போலீசரின் முதல் கட்ட விசாரணையில் தனக்கன்குளம் ஜெயம் நகர் அருகே உள்ள மிட்டல் நகர் பகுதியைச் சேர்ந்த விவேக் என்பவரின் மனைவி ஷாலினி (வயது 23), அவரது மகள் விஷாகா (வயது 2). மேலும் விவேக் ஷாலினி இருவருக்கும் திருமணம் முடிந்த நான்கு ஆண்டுகள் ஆகிறது.
விசாக என்ற இரண்டு வயது குழந்தையை தவிர தற்போது ஷாலினி கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஷாலினியின் கணவர் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது இதனால் மன உளைச்சலில் இருந்த ஷாலினி இரண்டு வயது மகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் சம்பவம். குறித்து திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கணவர் இறந்த துக்கத்தில் கர்ப்பிணிப் பெண் தனது இரண்டு வயது குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தனக்கன்குளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையின் உடல் தேடப்பட்டு வந்தது. மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு துறையினரால் இரண்டு வயது குழந்தை உடல் மீட்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.