Home செய்திகள் மதுரை சோழவந்தான் அருகே தேனூரில் ரயில்வே பெண் காவலர் இரு குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை…

மதுரை சோழவந்தான் அருகே தேனூரில் ரயில்வே பெண் காவலர் இரு குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை…

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தை சேர்ந்த ரயில்வே காவல்துறை பெண் காவலரான ஜெயலெட்சுமி என்பவர் தனது கணவர் சுப்புராஜ் மற்றும் இவர்களது குழந்தைகளான பவித்ரா (11), காளிமுத்து (9) என்ற இரு குழந்தைகளுடன் மதுரை திருப்பாலை பகுதியில் வசித்து வந்துள்ளார்.

ரயில்வே போலீசில் பணிபுரியும் பெண் காவலர் ஜெயலட்சுமி (Gr.I.  137 /2010 batch ), கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தேனூர் கிராமத்தில் புரட்டாசி பொங்கல் திருவிழா அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில்கடந்த 20 நாட்களாக தேனூரில் உள்ள தனது தாய்வீட்டில் தன் இரண்டு குழந்தைகளுடன் தங்கியிருந்த நிலையில் இன்று மாலையில் தேனூர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தனது குழந்தைகளான பவித்ரா (11), காளிமுத்து (9) ஆகிய இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துசடலத்தை கைப்பற்றிய போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தற்கொலைக்கான காரணம்.சில நாட்களுக்கு முன்பு ஜெயலட்சுமிக்கு திருச்சிக்கு பணிமாறுதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில்  பணியிடமாற்றம் காரணமா அல்லது குடும்ப பிரச்சினையா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபகாலமாக தமிழகத்தில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் மதுரை சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தைச் சேர்ந்த ரயில்வே காவல்துறையில் பணிபுரியும் ஜெயலட்சுமி என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில் காவல்துறையில் சமீக காலமாக கடும் மன அழுத்தம் காரணமாக தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழக அரசு காவல்துறையில் பணிபுரிவர்களுக்கு மன அழுத்ததற்கான சிகிச்சை மனநல ஆலோசனைகள் ஆகியவை வழங்க வேண்டும் என்றும் வாரம் தோறும் விடுமுறை அளித்து அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

.செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!