காதல் தோல்வி…காவலர் தற்கொலை….

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேளி சாலையில் உள்ள நக்கலப் பட்டி கிராமத்தில் காதல் தோல்வி காரணமாக போலீஸ் தற்கொலை செய்து கொண்டார். உசிலம்பட்டி அருகே நக்கலப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த வனராஜா மகன் சதீஷ் வயது 27 இவர் பழனி பட்டாலியன் பிரிவில் போலீஸ் வேலை செய்து வந்தார். இவருக்கும் மற்றொரு பெண்ணுக்கும் காதல் இருந்து வந்தது இதற்கு சதீஷின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் இதனால் மனமுடைந்த சதீஷ் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது போர்வையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த குடும்பத்தினர் போலீசுக்கு புகார் செய்து சதீஷின் உடல் உசிலம்பட்டியில் மருத்துவமனையில் கொண்டு சென்றனர் சம்பவம் குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீஸ் விசாரணை செய்து வருகின்றனார்.