வடமதுரை தனியார் நூற்பாலையில் இருந்து மாயமான இளம்பெண் தற்கொலை?..

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை தனியார் நூற்பாலையில் இருந்து மாயமான இளம்பெண் தற்கொலை புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் சேர்ந்த சரண்யா(19)இவர் நடுகாண்டனூர் பிரிவில் உள்ள தனியார் நூற்பாலையில் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார் இதற்கிடையில் இவருக்கும் இழுப்பூரை சேர்ந்த சதாம் உசேன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது தீவிரமாக காதலித்து வந்தனர் இந்த நிலையில் கடந்த மாதம் 25ஆம் தேதி சரண்யா நூற்பாலை விடுதியில் இருந்து மாயமானார் அவரை சக ஊழியர்கள் தேடி வந்தனர். அப்போது சரண்யா யாருக்கும் தெரியாமல் நூல்மில்லில் இருந்து வெளியேறி தனது காதலன் சதாம்உசேன் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது காதலர்கள் இருவரும் சேர்ந்து கேரளா, கோவை பகுதிகளுக்கு சென்றதாக தெரிகிறது.

இன்னிலையில் கையிலிருந்த பணம் செலவனதால் திரும்பி வந்துள்ளனர் பெற்றோர்கள் தங்கள் காதலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்து இருவரும் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் இருவரும் திருச்சி பஸ் நிலையம் அருகே பெட்ரோலை வாங்கி குடித்துவிட்டு மயக்கமடைந்தனர் அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் சிகிச்சை பலனின்றி சரண்யா பலியானார் சதாம் உசேனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்..