இராமேஸ்வரம் நகராட்சி ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை ..

இராமேஸ்வரம் துளசி பாபா மடம் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன், 56 . இவர் ராமேஸ்வரம் நகராட்சி டிராக்டர் டிரைவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இன்று காலை அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ராமேஸ்வரம் போலீசார் அவர் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றினர். அதில் நகராட்சி ஆணையரும், சுகாதார ஆய்வாளரும் பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்து கொள்ள நேர்ந்தது என அதில் எழுதப்பட்டிருந்தது. இவருக்கு உஷா என்ற மனைவியும், ராம்குமார், ராஜ்குமார் என்ற மகன்கள் உள்ளனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.