வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்..

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம் 1.50 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகின்றது.

இன்று இந்த ஆண்டிற்கான (2018 – 19) கரும்பு அரவை துவங்கியது. ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம் பகத் சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் முன்னாள் சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன் தலைமை கரும்பு அலுவலர் முனிசாமி ஆகியோர் கரும்பு கட்டுகளை இயந்திரத்தில் போட்டனர்.

கே, எம்.வாரியார்-செய்தியாளர், வேலூர்