62
பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானோர் மனு அளித்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி தெற்கு வீரபாண்டியபுரம் காயலூரணி குமாரெட்டியாபுரம் குமாரகிரி மீளவிட்டான், முத்தையாபுரம், முள்ளக்காடு, 3வது மைல் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலம் வந்து மனு அளித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறுகையில்,”ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் கடந்த 9 மாதங்களாக வேலையில்லாமல் வறுமையில் தவித்து வருகிறோம். வாங்கிய வாகனக் கடன் உள்ளிட்ட கடனை செலுத்த முடியவில்லை. தற்போது பசுமைத் தீர்பாயம் ஆலையை திறக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் இவ்விஷயத்தில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மெளனம் சாதித்து வருகிது. பசுமைத் தீர்ப்பாயத்தின் உததரவை உடனே நிறைவேற்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சான்றிதழ் வழங்க வேண்டும். துண்டிக்கப்பட்ட மின் இணைப்புை வழங்கி ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலளார் செல்வசுந்தர் கூறுகையில், இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டர்லைட் ஆலையால் இந்தியா செம்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. இந்த வளரச்சியை பிடிக்காத சீனா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் நாடுகளின் தூண்டுதலின் பேரில் மே 17 இயக்கம், மக்கள் அதிகாரம், நாம் தமிழர் கட்சி, மதிமுக, கிறிஸ்தவ அமைப்புகள் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
பொதுமக்களை மூளைச் சலவை செய்து தூத்துக்குடியை போர்க்களமாக மாற்றியுள்ளனர். தற்போது பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவின் பேரில் ஆலையை திறந்து 30ஆயிரம் குடும்பங்களின் வறுமையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கணேசன், மகளிர் அணி மாவட்ட செயலளார் விஜயா, உடன்குடி ஒன்றிய தலைவர் தினரகரன், ஒன்றிய மகளிர் அணி செயலளார் பாலசுந்தரி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது
செய்தி: அஹமத்
படம்: சாதிக்
You must be logged in to post a comment.